தமிழ்நாடு

“முல்லை பெரியாறு அணை குறித்து அச்சம் பரப்புகிறார்கள்” - உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு பதில்

Veeramani

தொடர்ந்து சமூக வளைதளங்களில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அச்சம் பரப்புவது பிரச்சாரமாகவே செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி கேரள அரசு மற்றும் ஜார்ஜ் ஜோசப் என்பவர் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இன்று காலை தான் தங்களுக்கு இதுகுறித்த தகவல் கிடைத்ததாகவும், எனவே அதற்கு பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேரள அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது வழக்கின் விசாரணையை நேரடி விசாரணையாக நடத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் ஏற்பதாக அறிவித்தனர்.