தமிழ்நாடு

சென்னை: காலி மைதானத்தில் கிடந்த டம்மி நாட்டு வெடிகுண்டால் பரபரப்பு

சென்னை: காலி மைதானத்தில் கிடந்த டம்மி நாட்டு வெடிகுண்டால் பரபரப்பு

JustinDurai

சென்னை வடபழனியில் உ‌ள்ள‌‌‌‌‌ ‌‌‌‌‌காலி மைதானத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு போன்று கிடந்த பொருளால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ள மைதானம் ஒன்றில் 2 நாட்டு வெடிகுண்டு கிடப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்தனர். பிறகு வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தபோது அது சினிமாவில் பயன்படுத்தும் டம்மி நாட்டு வெடிகுண்டு என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. அதனை செயழிலக்க செய்யும் பணியில் விருகம்பாக்கம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.