தமிழ்நாடு

கலை பொக்கிஷங்களை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை- பாண்டியராஜன்

கலை பொக்கிஷங்களை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை- பாண்டியராஜன்

webteam

தமிழகத்திலுள்ள கலை பொக்கிஷங்களையும், புராதன சின்னங்களையும் தமிழக அரசு ஒருபோதும் மத்திய அரசுக்கு விட்டுக் கொடுக்காது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆவடி மாநகராட்சியில் உள்ள 17 பள்ளியில் மொத்தம் 4733 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு 18.90 லட்சம் மதிப்பீட்டில் தனியார் நிறுவனம் மூலம் பேரிச்சம் பழச்சாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “ தமிழகத்திலுள்ள பொக்கிஷங்கள், புராதன சின்னங்கள், கலைபண்பாட்டு நினைவு சின்னங்கள் போன்றவற்றை எந்தக் காலத்திலும் மத்திய தொல்லியல்துறை கட்டுபாட்டிற்கு அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதை தவறாக புரிந்து கொண்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 39 ஆயிரம் கோயில்கள் சிறப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்காலத்தில் கோயில்களை தொல்லியல் துறை சரியாக கவனிக்காமல் இருந்தது. அதிமுக ஆட்சியில் கூடுதலாக கவனம் செலுத்தி புராதன சின்னங்களை பாதுகாத்து வருகிறோம்” என்று கூறினார்.