தமிழ்நாடு

அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை;ஆட்சி கலையாது - வைத்திலிங்கம்

அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை;ஆட்சி கலையாது - வைத்திலிங்கம்

JustinDurai

அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை என்று ஓபிஎஸ் வீட்டில் நடந்த  ஆலோசனைக்குப் பிறகு கூறியுள்ளார் வைத்திலிங்கம். 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பங்கேற்றார்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை. தற்போதைய குழப்பத்தால் ஆட்சி கலையாது.  தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும். ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என இருவருக்கும் நான் ஆதரவாளனாகவே இருக்கிறேன் என்று கூறினார். 

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து கடும் விவாதம் எழுந்ததாக தகவல்கள் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் இன்று அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.