தமிழ்நாடு

சிறையில் வீட்டு உணவு அளிக்க முடியாது... சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு

சிறையில் வீட்டு உணவு அளிக்க முடியாது... சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு

webteam

சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கையை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்தது.

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த சசிகலா, சிறையில் வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதேபோல் சிறையில் முதல் தர வகுப்பில் அறை ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டார். இதைக் கேட்ட நீதிபதி அஷ்வத் நாராயணா, வீட்டு உணவு அளிக்க முடியாது என்று தெரிவித்தார். முதல் தர வகுப்பு கோருவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். சசிகலாவிற்கு குறைந்த ரத்த அழுத்தம், நீரிழிவு, மூட்டு வலி இருப்பதால் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, கைதி எண் 3295 ஒதுக்கபட்டுள்ளது. இளவரசிக்கு கைதி எண் 3296 மற்றும் சுதாகரனுக்கு 3297 என்றும் ஒதுக்கப்பட்டுள்ளன.