போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை அளிக்க அரசுக்கு மனம் உள்ளது, ஆனால் நிதியில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது.போராட்டத்தின் காரணமாக, பல இடங்களில் குறைவான அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், நிதி பற்றாக்குறையினால் அரசு திணறி வருவதாக தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை அளிக்க அரசுக்கு மனம் உள்ளது, ஆனால் நிதியில்லை எனவும் அவர் கூறினார். மேலும் பேசுகையில் ஆசிரியர் தகுத்தி தேர்வு எழுதி பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு படிப்படியாக பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.