கூடலூரில் பழங்குடியின மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட இலவச அரசு தொகுப்பு வீடுகள் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்கு உட்பட்ட பென்னை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு, வனத்தை ஒட்டியுள்ள பாலபள்ளி கிராமத்தில் இலவச தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 20 பழங்குடியின குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர்.
3 ஆண்டுகள் கூட நிறைவு பெறாத நிலையில், சாதாரண மழைக்கே வீடுகளில் தண்ணீர் கசிவதாக புகார் எழுந்துள்ளது. பல வீடுகளில் தரைதளம் போடாமலும், கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்காமலும் பயனாளர்களுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, வீடுகளை சீரமைக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.