தமிழ்நாடு

கந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்!

கந்துவட்டியால் ஊசலாடும் ஒரு பெண்ணின் உயிர்!

webteam

ஆண்டிப்பட்டி அருகே கந்துவட்டிக் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

தேனி மாவாட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்த முத்துமணி‌ என்பவரின் மனைவி லட்சுமி, அதே பகுதியை சேர்ந்த ‌பழனியம்மாள் என்பவரிடம் தனது மகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனிற்காக 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பழனியம்மாள் எழுதி வாங்‌கியுள்ளார். அதுவும் போததென்று மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். 

இது குறித்து கந்துவட்டி தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளார் பாஸ்கரனிடம் லட்சுமி புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த லட்சுமி, அந்த பகுதியில் உள்ள ஓடைப்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போது சேலை அறுந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.