தமிழ்நாடு

தேனி: அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய கிராம மக்கள்

தேனி: அரசு கள்ளர் தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய கிராம மக்கள்

webteam

தேனி வாழையாத்துபட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்விச்சீரை கிராம மக்கள் வழங்கினர்.

தேனி அருகே உள்ள பூதிபுரம் பேரூராட்சி வாழையாத்துபட்டி கிராமத்தில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக அந்த பகுதியைச் சேர்ந்த பூதிப்புரம் பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர், ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பாக அப்பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கப்பட்டது.

இந்த கல்விச் சீரில் ரூ.5 லட்சம் மதிப்பிலான டிவி, நாற்காலி, டேபிள், பீரோ உள்ளிட்ட பள்ளிக்குத் தேவை பெருட்களை வழங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அரசு ஆரம்ப பள்ளியாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியை அரசு நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.