ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது பழமையான இரு வெண்கல சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மாப்பட்டியை சேர்ந்தவர் அழகன். இவர் வீட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது மண்ணில் ஏதோ புதைந்திருப்பதைக் கண்ட அவர், அதனை தோண்டி வெளியே எடுத்து கழுவி பார்த்துள்ளார். அவை பழமையான வெண்கல சிலைகள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிலைகள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிலைகளை கைப்பற்றி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.