தமிழ்நாடு

தேனியில் மிரட்டும் தேன்கூடு! அச்சத்தில் மக்கள்..

webteam

தேனியில் அச்சுறுத்தும் வகையில் உள்ள தேன் கூட்டை உரிய முறையில் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் நாள் தோரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பணிபுரியும் செவிலியர் மற்றும் மருத்துவர்களுக்கு என மருத்துவமனையில் பின்பகுதியில் புதிதாக குடியிருப்பு வளாகம் கட்டி அதில் பணியாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் ராட்சத தேன் கூடு கட்டி உள்ளது. 

அதில் உள்ள தேனீக்கள் 5 கடித்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயக்க நிலை அடையும் அளவுக்கு ராட்சத தேனீக்கள் என்பதால், இந்த தேனீக்களை யாரவது சீண்டினாலோ கூடு கலைந்து நோயளிகளையும் பணியாளர்களையும் தாக்கும் ஆபத்து உள்ளது. இதனால் அந்த குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கும் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அந்த பகுதியில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே மருத்துவமனை நிர்வாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள ராட்சத தேன் கூட்டை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.