Eswaran
Eswaran pt desk
தமிழ்நாடு

தேனி: வனத் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி - உறவினர்கள் சாலை மறியல்

webteam

கம்பம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியான சுருளியாறு மின் நிலையம் அருகே உள்ள வண்ணாத்திப்பாறை காப்புக் காடுகளில் நேற்றிரவு வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அத்து மீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட வந்ததாக குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரை வனத் துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் கத்தியால் குத்தி தாக்க வந்ததாக கூறப்படுகிறது.

Road blocked

இதனால் பாதுகாப்பு கருதி வனவர் திருமுருகன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஈஸ்வரன் உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வனத் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை கண்டித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஈஸ்வரனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டு தற்போது உறவினர்கள் நியாயம் கேட்டு தேனி ஆட்சியர் அலுவலகம் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.