தமிழ்நாடு

பரோட்டா உண்ணும் குரங்குகள்!

பரோட்டா உண்ணும் குரங்குகள்!

webteam

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் உணவிற்காக நகருக்கு வந்து பழக்கப்பட்ட குரங்குகள் பரோட்டாக்களையும் உண்டு பழகியுள்ளன. இதனால்
நகர ஓட்டல்களில் மீதமாகும் பரோட்டாக்களை உரிமையாளர்கள் குரங்குகளுக்கு வழங்குகின்றனர்

தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில், தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் மேகமலை வன உயிரிகள் காப்பகம் மற்றும் கம்பம் வனசரகத்திற்கு உட்பட்ட வனங்கள் உள்ளன. பருவ மழை பொய்ப்பால், வனத்திற்குள் பழவகைகள் உள்ளிட்ட உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்திற்குள் இருந்து வெளிவரும் ஏராளமான குரங்குகள் கூட்டம் குமுளி நகரின் கடைகளை குறிவைத்து உணவு தேடி வருகின்றன. அவ்வாறு நகருக்கு வரும் குரங்குகள் அனைத்து உணவுப்பொருட்களையும் உண்டு பழகியுள்ளன. அந்த வகையில் சமீபகாலமாக பரோட்டாக்களையும் உண்ண துவங்கியுள்ளன குரங்குகள். இதற்காக நகர கடைகளில் மீதமாகும் பரோட்டாக்களை வீணாக்காமல், குரங்குகளுக்கு வழங்கி மகிழ்கின்றனர். பழங்களை உண்ணும் குரங்குகள் ஆசையோடு பரோட்டாக்களையும் உண்ணுவதை பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்து செல்கின்றனர்.