தேனியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதை தொடர்ந்து, தண்ணீர்தொட்டி பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி அருகே தேவாரம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இப்பகுதியில் பெய்து வரும் மழையால் தண்ணீர்தொட்டி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் கோம்பை புதுக்குளத்தில்
தேக்கி வைக்கப்பட்டு, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், சிந்தலச்சேரி, எஸ்.தார்மத்துபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் மூன்று ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பருவமழை பெய்து வரும் மழைநீரை, புதுக்குளம் கண்மாயில் தேக்கி வைக்கும் பணியில் விவசாயிகள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த பருவமழையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.