தமிழ்நாடு

மணல் திருட்டு சோதனையில் பிடிபட்டது சாராயம்

மணல் திருட்டு சோதனையில் பிடிபட்டது சாராயம்

Rasus

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி பகுதியில் மணல் திருட்டு தொடர்பான சோதனை மேற்கொண்ட போது 200 லிட்டர் சாராயம் சிக்கியுள்ளது.

வேலூர் மாவட்டம் சேம்பள்ளி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வட்டாட்சியர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனம் ஒன்றில் வேகமாக வந்த நபர், வட்டாட்சியரை பார்த்தவுடன் வாகனத்தை விட்டுவிட்டு தப்பிச் சென்றார். அந்த வாகனத்தை சோதித்த போது சுமார் 200, லிட்டர் கள்ளச்சாரயம் அதில் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. பின்னர் கள்ளச் சாராயமும், வாகனமும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குடியாத்தம் பகுதியில் அதிக அளவில் கள்ளசாராயம் காய்சுவதும் அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்துவருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் கண்டுகொள்ளாத நிலையில் மிகவும் சுதந்திரமாக குடிசை தொழில் போல கள்ளசாராய விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் வட்டாட்சியரே கள்ளச்சாராயத்தை பிடிக்கும் அளவிற்கு நிலை மோசமாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.