தமிழ்நாடு

சென்னை: திருட சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன் கைது

சென்னை: திருட சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன் கைது

webteam

சென்னையில் திருடச் சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ணா பகதூர்(30). இவரும் இவரது மனைவியும் கடந்த ஒரு வருடமாக அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதையடுத்து பகதூர் வழக்கம்போல் நேற்று இரவு பணிக்கு சென்று குடியிருப்பின் வாசலில் தூங்கியுள்ளார். அவரது மனைவி அடுக்குமாடி குடியிருப்பின் மேல் பகுதியில் லிப்ட் அறையில் உறங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பகதூர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து தப்பிய மனைவி கூச்சலிட மர்ம நபர் தப்பியோடினார்.

இதுகுறித்து கிருஷ்ணா பகதூர், திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது அமைந்தகரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ராமகிருஷ்ணன் அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை வேளையில் பால் விநியோகிப்பது ல சென்று சுவர் எகிறி குதித்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்தையும், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திருடுவதற்க்காக சென்றபோது பகதூர் மனைவி உறங்கியதை பார்த்து சபலத்தில் கத்தியை காட்டி மிரட்டி வன்கொடுமை செய்ததையும் ஒப்புகொண்டார். இவர் மீது ஏற்கெனவே அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொள்ளை அடித்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.