தமிழ்நாடு

பணம் இருக்குமென நினைத்து ஏடிஎம்-ல் பாஸ்புக் மிஷினை உடைத்த மர்ம நபர்

பணம் இருக்குமென நினைத்து ஏடிஎம்-ல் பாஸ்புக் மிஷினை உடைத்த மர்ம நபர்

webteam

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலையில் ஏடிஎம் மிஷினை, அடையாளம் தெரியாத நபர் உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக எஸ்பிஐ வங்கியின் மும்பை கட்டுப்பாட்டு அறையில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதையடுத்து சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த 3 ஏ.டி.எம் மிஷின்களில் பாஸ்புக் என்ட்ரி பண்ணும் மெஷின் மட்டும் உடைக்கபட்டிருந்தது. இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கொள்ளையனின் சிசிடிவி புகைப்படங்களை மும்பையிலிருந்து இருந்து சைதாப்பேட்டை காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதைவைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.