தமிழ்நாடு

“மருத்துவமனையில் இடமில்லை; என் தாயை காப்பாத்துங்க” - அழுது வீடியோ வெளியிட்ட பெண்

“மருத்துவமனையில் இடமில்லை; என் தாயை காப்பாத்துங்க” - அழுது வீடியோ வெளியிட்ட பெண்

kaleelrahman

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது தாயை காப்பாற்றும்படி பெண் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அமமுக நிர்வாகி ஆதரவுகரம் நீட்டியுள்ளார்.

ஆவடியை சேர்ந்தவர் நூர்ஜகான். அமமுக நிர்வாகியான இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் இடம் இல்லை என கூறியதால் என்ன செய்வதன்று தெரியாமல் அவரது மகள் நிரோஷா கண்ணீர் வடிய வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், யாரும் வெளியே வராதீர்கள் என உருக்கமாக சொல்வது அனைவரது மனைதையும் உருக வைத்துள்ளது.

மருத்துவமனைகளில் இடமில்லை. ஆம்புலன்ஸ் அழைத்தாலும் வரவில்லை என கண்ணீர் மல்க அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் நெகிழ செய்தது. இது குறித்து தகவல் அறிந்த அமமுக முன்னாள் எம்எல்ஏ கதிர்காமு நூர்ஜஹானின் மகளை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவரது முயற்சியால் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நூர்ஜஹான் கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.