புதுச்சேரியில் முகக்கவசம் அணியாததால் அபராதம் விதித்த பெண் காவலர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால், புதிய பேருந்து நிலையம் அருகில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் சென்ற பெண்ணை வழிமறித்து அபராதம் விதிக்க பெண் காவலர்கள் முயன்றபோது அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சுகாதாரத் துறையில் பணியாற்றுவதால் தமக்கு கொரோனா வராது என கூறி அந்த பெண் வாக்குவாதம் செய்தார். இந்த வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.