தமிழ்நாடு

புதையல் எடுத்து தராததால் பூசாரியை கடத்திய பெண்

புதையல் எடுத்து தராததால் பூசாரியை கடத்திய பெண்

webteam

திண்டுக்கல் மாவட்டம் தங்கமாப்பட்டியை சேர்ந்த பூசாரி கடத்தப்பட்ட விவகாரத்தில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

புதையல் எடுத்து தருவதாகவும், பில்லி சூன்யத்தை நீக்குவதாகவும் கூறி சக்திவேல் என்ற பூசாரி சென்னையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் புதையல் எடுத்துத்தராமல் அவர் ஏமாற்றியதால், பணத்தை இழந்த பெண் ஆட்களை ஏவி அவரை கடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடுதல் நடத்திய நிலையில், கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகே பூசாரி சக்திவேல் மீட்கப்பட்டார்.  அவரை கடத்திய வசந்த், பிரகாஷ், முருகன்,உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கடத்தியவர்கள் தாக்கியதில் காயமடைந்த சக்திவேல், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.