தமிழ்நாடு

கடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு

கடலூர்: மழைவெள்ளம் சூழ்ந்து தீவாக மாறிய கிராமம்... மக்கள் தவிப்பு

JustinDurai

நிவர் புயல் தாக்கம் காரணமாக கடலூர் மாவட்டம் அழகு பெருமாள் குப்பம் கிராமம் மழைவெள்ளம் சூழ்ந்து தனித் தீவாக காட்சியளிக்கிறது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பலத்தக் காற்றுடன் இரவு முழுவதும் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

பண்ருட்டி வட்டம் அண்ணாகிராம ஒன்றியத்துக்குட்பட்ட அழகு பெருமாள் குப்பம் கிராமம் மழைவெள்ளம் சூழ்ந்து தனித் தீவாக காட்சியளிக்கிறது. மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கியுள்ளது.