தமிழ்நாடு

தீவுபோல் காட்சியளிக்கும் கிராமம்: ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் தவிப்பு

தீவுபோல் காட்சியளிக்கும் கிராமம்: ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் தவிப்பு

webteam

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஓலகாசி மற்றும் சித்தாத்தூர் கிராமங்கள் தொடர்ந்து தீவுபோல் காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஓலகாசி மற்றும் சித்தாத்தூர் கிராமங்களின் அருகில் கவுண்டன்ய ஆறு, பாலாறு, அகரம் ஆறுகள் பாய்கின்றன. இந்த மூன்று ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2 கிராமங்களும் தீவுபோல் காட்சி அளிக்கின்றன. இதனால் ஓலகாசி கிராமத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு காலவறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஒருசில கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆடையை கழற்றி கையில் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் ஆற்று வெள்ளத்தைக் கடந்து செல்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே ஆற்றைக் கடக்க முறையான பாலம் அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.