சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கும் அங்கு பணிபுரிந்த முன்னாள் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாகனங்கள் கட்டணமில்லாமல் சென்றன.
நந்தக்கரை சுங்கச் சாவடியில் புதிய நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த நிலையில் அங்கு பணிபுரிந்த 60க்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்தது. அவர்களில் 50க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு சென்று மீண்டும் பணி வழங்கக்கோரி முற்றுகையிட்டனர். இதனால் சுங்கச்சாடி நிர்வாகத்தினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இதனையொட்டி சிறிது நேரம் காத்திருந்த வாகனங்கள் பின்னர் கட்டணம் செலுத்தாமல் சென்றன. தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.