கடலூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுகவினர் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து இவர்களுக்கு இடையில் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரு தரப்பினர் மீதும் காவல் நிலையத்தில் வழக்குகளும் உள்ளன.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் முற்றியதில், திருவதிகை பகுதியைச் சேர்ந்த பாலாஜி, மணிகண்டன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலைச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.