தமிழ்நாடு

பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை

பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை

webteam

சிவகங்கை மாவட்டம்‌ மானாமதுரையில் பயிற்சி மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.‌

மானாமதுரை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் மனோகரன் என்பவரது மகன் சிவநாதன். 22 வயதான இவர் சென்னையில் உள்ள ESI மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னையிலிருந்து ஊர் திரும்பிய, சிவநாதன் தனது வீட்டு மாடிக்கு சென்று பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

 மயங்கிய நிலையில் கிடந்த சிவநாதனை ‌அக்கம்பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநாதன் உயிரிழந்தார். இது குறித்து மானாமதுரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவநாதன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.