தமிழ்நாடு

உதகை மலைரயில் கட்டணம் உயர்கிறது

webteam

நீலகிரியின் அடையாளமான ஊட்டி மலை ரயிலின் கட்டணம் வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் நீலகிரி ‌மக்கள்.

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது மலைரயில். மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான 27 கிலோமீட்‌டர் தூரத்திற்கு நீராவி ரயில் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது இந்‌த ரயில் 212 வளைவுகள், 16 குகைகள், 31 பெரிய பாலங்கள், 219 சிறிய பாலங்கள் என இந்த மலைரயில் பயணம் ‌பரவசப்படுத்தும் அனுபவம். 

கல்லார் முதல் குன்னூர் வரை உள்ள 27 கிலோமீட்டர் தூரம் வரை தண்டவாளத்தை விட்டு விலகாமல் இருக்க பல் சக்கரம் மூலம் ரயில் இயக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் ‌இந்த ரயில் பயணத்தை பெரிதும் விரும்பி வரும் நிலையில், மலைரயில் 26 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி இதனை சீரமைக்க நடவடிக்கைகள் ‌எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முதல் மலைரயில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

உயர்த்தப்பட்ட கட்டணத்தின்படி, மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை‌முதல் வகுப்பு கட்டணம் 195 ரூபாயில் இருந்து.395 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இரண்டாம்வகுப்பு முன்பதிவு கட்டணம் 30 ரூபாயில் இருந்து 130 ரூபாயாகவும், முன்பதிவற்ற இரண்டாம் வகுப்பு கட்டம் 15 ரூபாயில் இருந்து 75 ருபாயாக உயர்த்தப்படுகிறது இதேபோல, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு முதல்வகுப்பு கட்டணம்.174‌ரூபாயில் ‌இருந்து 295 ஆ‌கவும், இரண்டாம் வ‌குப்பு முன்பதிவு கட்டணம் 25 ரூபாயில் இருந்து ‌85 ரூபாயாகவும், இரண்டாம்வகுப்பு முன்பதிவற்ற கட்டணம் 10 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இந்த ‌கட்டண உயர்வு அந்த ரயிலை நம்பி உள்ள உள்ளுர் பயணிகளுக்கு சுமையாகும் என்கிறார்கள்.

மலைரயிலை நவீனப்படுத்தும் வகையில் அதிநவீன 15 பெட்டிகளும், 2 நீராவி‌என்ஜின்களும் தயாரிக்கப்பட்டு இணைக்கப்படவுள்ளதால், வரும் கோடை சீசனில் நீலகிரி மலை ரயில் புதுப்பொலிவுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேநேரம் கட்டணத்தை குறைத்தால் தங்களுக்கு பேரூதவியாக இருக்கும் என்பது நீலகிரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.