அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 பேருக்கு டேப் (TAB) வழங்கும் திட்டம் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் 20-வது கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்கள்களை சந்தித்த அவர் பேசியபோது...
தமிழகத்தில் இதுவரை 9,39,87,972 பேர் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர். இந்த முகாம் முலம் 90 சதவிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள முதல் தவணை தடுப்பூசியை 5,20,29,899 பேர் (88.19%) செலுத்தி உள்ளனர். இரண்டாம் தவனை தடுப்பூசியை 3,90,21,718 (67.41%) பேரும் செலுத்தி உள்ளனர்.
15 முதல் 18 வயதுடைய சிறுவர்கள் 33.46 லட்சம் தகுதி பெற்றுள்ளனர். அதில் 25,91,788 (77.46%) பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் 10ம் தேதி தொடங்கப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசி போட நேற்று வரை 4,48,394 பேர் கண்டறியபட்டனர். அதில் 3,44,497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
97 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசியை 100மூ செலுத்திய 2669 ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் உள்ளன.
மக்களைத் தேடி மருத்துவம் மூலம் உயர் ரத்த அழுத்தம் சிகிச்சைக்கு 19 லட்சம் பேரும், 13.15 லட்சம் பேர் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு இரண்டும் உள்ள 9.71 லட்சம் பேருக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
பேலியேட்னிவ் கேர் சிகிச்சை 1,71,068 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய வகை நியோ வைரஸ் பரவி வருகிறது. வவ்வால் முலம் பரவக் கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 பேருக்கு டேப் (TAB) வழங்க திட்டம் இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால், தேர்தலுக்கு பிறகு மாணவர்களுக்கு டேப் (TAB) வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என கூறினார்.