பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி தொடங்க உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதி கூடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்போதும் ஆளுநர் உரையுடன் தான் பேரவை தொடங்கும். அதன்படி வரும் ஆண்டும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்ற உள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் 7 பேர் விடுதலை குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு பின் நடைபெறும் கூட்டத்தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கும் புதிய ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின் சட்டப்பேரவைத் தொடரை எவ்வளவு நாட்கள் நடத்துவது என சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். இதுதவிர, கஜா புயல் பாதிப்பு குறித்தும் உள்ளாட்சி மன்றத்தேர்தல் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.