தமிழ்நாடு

"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்

"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்

JustinDurai

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் முழு பொது முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என்றும் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.