தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது - தமிழக அரசு தகவல்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது - தமிழக அரசு தகவல்

JustinDurai

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றம் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி வந்த வழக்கமான மண்ணெண்ணெய் அளவில் தற்போது 20% மட்டுமே ஒதுக்கி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோருக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. எனவே பொதுமக்களிடம் இருந்து புகார் வருவதை தவிர்ப்பதற்காக மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவு குறித்து கடைகளில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது