தமிழ்நாடு

தொடர் விடுமுறை - இன்று முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள்

JustinDurai

தொடர் விடுமுறையையொட்டி இன்று முதல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் வருடப் பிறப்பு, புனித வெள்ளியை தொடர்ந்து சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் சென்னையிலிருந்து கூடுதலாக 1,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து கோவை, சேலம், நாகை, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக பிற ஊர்களில் இருந்து ஏப்.17-ல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு