தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 7 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கொள்கை ரீதியான அரசின் பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நவ. 2-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது நவம்பர் 7 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.