தமிழ்நாடு

முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை - 27 ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவை

newspt

தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல், ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் புதிய சட்ட மசோதா ஏற்படுத்த இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், விரைவில் இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வரும் ஜூலை மாதம் 28ம் தேதி முதல் சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற இருக்கக் கூடிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள், தொடக்கவிழா மற்றும் நிறைவு விழா சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

- எம்.ரமேஷ்