தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் தொடங்கிய புதிய கட்சி

ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் தொடங்கிய புதிய கட்சி

webteam

ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரினாவில் போராடிய மாணவர்கள் இணைந்து புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் என் தேசம் என் உரிமை என்ற பெயரில் கட்சித் தொடங்கப்பட்டு, கட்சி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. லஞ்சத்தை ஒழிப்போம், விவசாயத்தைக் காப்பாற்றுவோம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் குறிக்கோளாக கொண்டு தங்கள் கட்சி செயல்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேஸ் தெரிவித்தார். அதே போல் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த போராடுவோம் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் எபினேஸ் தெரிவித்தார்.