தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிறை சென்ற மாணவன் தற்கொலை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சிறை சென்ற மாணவன் தற்கொலை

Rasus

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கு சென்ற மாணவன் மனஉளைச்சலால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

சென்னை எம்.எம்.டி.ஏ பகுதியை சேர்ந்த சந்திரசேகர். இவருடைய மகன் உதயா. கூலி வேலை செய்து தான் உதயாவை சந்திரசேகர் படிக்க வைத்து வந்தார். உதயா அரும்பாக்கத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். தமிழகத்தின் மிகப்பெரிய போராட்டமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட உதயா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் பள்ளி சென்ற உதயாவை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறைக்கு சென்றவன் என கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல் அடைந்த மாணவன் உதயா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.