தமிழ்நாடு

மாணவி வளர்மதி ஜாமீனில் விடுவிப்பு

மாணவி வளர்மதி ஜாமீனில் விடுவிப்பு

rajakannan

குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவி வளர்மதி கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படித்து வந்த மாணவி வளர்மதி, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். கடந்த ஜூலை மாதம் சேலத்தில் அவர் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்த போது கைது செய்யப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்த காவல்துறை, வளர்மதி நக்சலைட்டுகளுடன் தொடர்பு கொண்டவர் என குற்றம் சாட்டியிருந்தது. கோவையில் உள்ள சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார். 

மாணவி வளர்மதி மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. வளர்மதியின் தந்தை மாதையன் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவி வளர்மதி கோவை மத்திய சிறையில் இருந்து இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.