நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர் ஒருவர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலைச் சேர்ந்த தினேஷ் நல்லசிவம் என்ற பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் வைத்திருந்த பையில் தற்கொலை கடிதம் ஒன்றும் இருந்தது. அதில் தனது தந்தை குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் அவரை திருத்தவே தாம் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தனது இறுதிச் சடங்கை தந்தை செய்யக்கூடாது என்றும் மாணவர் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
மேலும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட பிரதமர் மோடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். அப்படியும் டாஸ்டாக் கடைகள் மூடப்படவில்லை என்றால் ஆவியாக வந்து டாஸ்டாக் கடைகளை அழிப்பேன் என தற்கொலை கடிதத்தில் கூறியுள்ளார். இந்த மாணவர் இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள நீட் தேர்வை எதிர்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கு ஏற்பட்ட குடிப்பழக்கம் மகனுக்கு ஏற்படுத்திய அதிக பாதிப்பால் அவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.