நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாமக்கல்லைச் சேர்ந்த ஒருவர் பிணம் போல் படுத்து நூதன முறையில் போராட்டம் செய்தார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் சென்று பரப்புரை தொடங்கிய சமூக ஆர்வலர் ஒருவர், இன்று கும்பகோணம் வந்து உயிரற்ற உடல் போல படுத்துக் கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார்.
மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி தங்க சண்முகம் என்பவர் கடந்த 6ஆம் தேதி நாமக்கல்லில் இருசக்கர வாகனத்தில் பரப்புரையைத் தொடங்கினார். தற்போது ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 6 மாவட்டங்களில் பரப்புரை செய்திருக்கிறார். எட்டாவது நாளாக கும்பகோணம் வந்த தங்க சண்முகம், புதிய பேருந்து நிலையத்தில் பிணம் போல் படுத்துக் கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக பரப்புரை செய்தார். தனது இருசக்கர வாகன பிரச்சார பயணம் சென்னை தலைமைச் செயலகத்தில் முடியும் என்று தங்க சண்முகம் கூறினார்.