தமிழ்நாடு

நிலத்தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்த கொடூரம்

நிலத்தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்த கொடூரம்

PT

செஞ்சி அருகே நிலப் பிரச்னையில் இருவர் குத்திக் கொலை  செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(கொலை செய்யப்பட்ட முருகன் மற்றும் ஏழுமலை)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது தச்சம்பட்டு பகுதி. இப்பகுதியில் அண்ணன் தம்பியான முத்துகிருஷ்ணனும், ஏழுமலையும் வசித்து வந்தனர். இந்நிலையில் தம்பி ஏழுமலை அண்ணன் முத்துகிருஷ்ணன் நிலத்தின் வழியாக வைக்கோலை ஏற்றிவந்ததாக சொல்லப்படுகிறது. இதில் முத்துவுக்கும், ஏழுமலைக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றிய நிலையில் முத்துகிருஷ்ணன், ஏழுமலை மற்றும் அவரது மைத்துனர் முருகன் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார்.

(குற்றவாளி முத்துகிருஷ்ணன்)

இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த அனந்தபுரம் போலீசார் சடங்களை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  மேலும் தப்பியோடிய  முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.