காற்றழுத்த தாழ்வு பகுதி web
தமிழ்நாடு

வங்கக்கடலில் இரண்டு புயல் சின்னங்கள்.. 2 நாட்களில் புயலாக மாற வாய்ப்பு!

வங்கக்கடலில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

PT WEB

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வு பகுதி, வரும் 26ஆம் தேதி புயலாகமாறக்கூடும் என சென்னை வானிலைமையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியகாற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதியாகவலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்றுதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், அது மேலும் அதே திசையில் நகர்ந்து,புயலாக உருவாகுமெனதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய காற்றழுத்தம் தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 25ல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..