திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 8 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை, கோவில், நீதிமன்றம், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த மணப்பாறை பகுதியில் பொதுமக்கள் தண்டவாளத்தின் மீது செல்லாமல் இருக்க ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மழைநீர் வெளியேற வழியில்லாததால், சுரங்கப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் பொது மக்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.