காரைக்குடியில், பெற்ற தாயை வீட்டிற்குள் பூட்டிவிட்டு மகன் வெளியூர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன். இவர் தனது மனைவியுடன் பெங்களூர் செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால் அவருடன் தனது தாயை அழைத்து செல்ல மனம் இல்லாததால் அவர், தனது தாய் சற்குரு அம்மாளை வீட்டில் வைத்து பூட்டி உள்ளார். அதன் பின்பு பூட்டிய வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளார்.
பூட்டிய வீட்னுள் தனியாக இருக்க பயந்த சற்குரு அம்மாள், அக்கம் பக்கத்தினரிடம் காப்பாற்றும் படி சத்தமிட்டுள்ளார். அவரின் அழு குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு விரைந்த காவல் துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்டுள்ளனர். அதன் பின்பு அவரின் விருப்பபடி மகள் வீட்டிற்குப் பத்திரமக அனுப்பி வைத்தனர். பெற்ற தாயை சொந்த மகனே வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.