தமிழ்நாடு

குடும்பத் தகராறு: பெற்றோரும் மகனும் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

மகனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெற்றோர் இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று பெற்றோரின் சமாதியில் அவரது மகன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (51) சாந்தாமணி (45) தம்பதியருக்கு ரவீந்தரன் (28) சூர்யா (26) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். விவசாயியான முருகேசன், இளைய மகன் சூர்யாவுக்கு திருமணம் கூடி வந்த்ததால் அவர்களுக்கு திருமணத்தை முடுத்து வைத்துவிட்டார்.

இந்நிலையில் மூத்த மகனுக்கும் வரன் பார்த்து வந்துள்ளார். இது சம்மந்தமாக கடந்த 21ம் தேதி இரவு மூத்த மகனுக்கும் பெற்றோர்களான முருகேசன் சாந்தாமணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தகறாரில் மனமுடைந்த முருகேசன் சாந்தாமணி இருவரும் 21ம் தேதி இரவு கீழ்குப்பம் சுடுகாட்டிற்கு சென்று பூச்சி மருந்து குடித்து அங்கேயே இருவரும் உரிழந்தனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து யார் கண்ணிலும் படாமல் இருந்த ரவீந்திரன் நேற்று இரவு கீழ்குப்பம் சுடுகாட்டிற்கு சென்று பூச்சி மருந்து குடித்து, அவரது பெற்றோர்களின் சமாதிகளுக்கு இடையில் பிணமாக கிடந்துள்ளார். இதைக் கண்ட அக்கிராம மக்கள சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)