தமிழ்நாடு

முட்டை விலை ஏற்றத்திற்கு அரசே காரணம்: வணிகர் சங்கப்பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

முட்டை விலை ஏற்றத்திற்கு அரசே காரணம்: வணிகர் சங்கப்பேரவைத் தலைவர் குற்றச்சாட்டு

webteam

முட்டை விலை ஏற்றத்திற்கு மத்திய-மாநில அரசின் கவனக்குறைவே காரணம் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார். 

நாகர்கோவிலில் நடைபெற்ற வணிகர் சங்க கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதற்கு மத்திய மற்றும் மாநில அரசின் கவனக்குறைவே காரணம் என்று கூறினார், மேலும் இந்த விலை ஏற்றத்தை அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் திட்டமிட்டு ஓரிரு வாரத்திற்குள் அரசால் குறைக்க முடியும் என்றும் வெள்ளையன் தெரிவித்தார்.

நேற்று ஒரே நாளில் முட்டை விலை 42காசு அதிகரித்த நிலையில் 5 ரூபாய் 16 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முட்டையின் விலை 5 ரூபாய் 65 காசுகளாக உள்ளது. இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.