கோவில்பட்டியில் வாங்கிய சம்பளம் கட்டுபடியாகவில்லை, நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. மனமுடைந்த நகராட்சி தற்காலிக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்தித்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (28). நகராட்சியில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கும் ரோகிணி பிரபா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணசாமி தனது மனைவி ரோகிணி பிரபாவிடம் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட பணம் கேட்டுள்ளார். ஆனால், ரோகிணி பிரபா தன்னிடம் பணம் இல்லை. மாமனாரிடம் பணம் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணசாமி, நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் தன்னுடைய சம்பள பணத்தில் பாதி பெட்ரோலுக்கு போய்விடுவதாகவும், மனம் உடைந்து தனது ஊதியம் உயரவில்லை. ஆனால், பெட்ரோல் மற்றும் பொருள்களின் விலைவாசி பல மடங்கு உயர்ந்து இருக்கிறது என்று புலம்பியவாறு இருந்துள்ளார்.
அப்போது அவரது மனைவி ரோகினி பிரபா பாத்ரூமுக்குள் சென்ற விட தனியாக இருந்த கிருஷ்ணசாமி தீடீரென மனைவி சேலையை எடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்து ரோகிணி; கிருஷ்ணசாமி சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். அவர் அழுகை சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
புகாரை அடுத்து விரைந்து வந்த போலீசார், கிருஷ்ணசாமியின் உடலை மீட்டு உடற் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் போடுவதற்கு பணம் தர மறுத்த காரணத்தினால் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.