தமிழ்நாடு

"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்" : பொதுப்பணித்துறை

"ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல்" : பொதுப்பணித்துறை

webteam

தமிழகத்தில் வீடு தேடி மணல் வழங்கும் திட்டம் வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரியில் இருந்து பொதுப்பணித்துறை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கு ஏதுவாக அவர்களது இல்லத்திற்கு மணலை கொண்டு சென்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக தமிழக அரசு ஜூன் மாதம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் முதற்கட்டமாக எண்ணூர் மற்றும் தூத்துக்குடியில் இருந்து 100 கிமீ சுற்றளவில், மணலை வீடுகளுக்கே சென்று வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. TNSAND என்ற இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில், மணல் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு மணல், மாதந்தோறும் 5 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. இல்லம் தேடி மணல் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றால், இறக்குமதி செய்யும் மணலின் அளவை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.