தமிழ்நாடு

பள்ளிக்கு எதிரே இயங்கும் மதுக்கடையை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை

பள்ளிக்கு எதிரே இயங்கும் மதுக்கடையை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை

webteam

தேவதானபட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே 24 மணி நேரமும் இயங்கும் தனியார் மதுபானக் கடையை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானபட்டி வைகை அணை சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே தனியார் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடை அதிகாலை முதல் நள்ளிரவு வரை 24மணி நேரமும் மது விற்பனை செய்வதால் மதுப்பிரியர்கள் அதிகாலை முதலே மது அருந்தி விட்டு சாலைகளில் செல்லும் பெண்களை கேலி செய்வதும், பள்ளி மாணவிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதும், அரை நிர்வானத்தில் சாலையில் செல்வதும் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் இடையூறுகளைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது.இது குறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதனால், மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போது இடையூறுகளைச் சந்திப்பதாகக் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உட‌னடியாக தலையிட்டு தனியார் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு அந்த தனியார் மதுபானக்கடையை அக்கற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.