திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் மின்மாற்றியில் அணில் புகுந்ததால் மின் தடை ஏற்பட்டது. டிரான்ஸ்பார்மரில் வெடிச்சத்தம் கேட்டு மின் தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மின்மாற்றியின் டிரிப்பரில் ஒரு அணில் இறந்து கிடந்தது. இதன் பின்னர் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அணில்களால் மின் தடை ஏற்படுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்த சூழ்நிலையில் தற்போது திருப்பூரில், அணில் டிரான்ஸ்பார்மரில் ஏறியதால் மின்தடை ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மின் ஊழியர்கள் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.