தமிழ்நாடு

இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

webteam

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இடி,மின்னல்,சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். உதகையில் நஞ்சநாடு, இத்தலார், எம்ரால்டு போன்ற பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. 

அதே போல் நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் மழை பெய்தது. ராதாபுரம், வடக்கன் குளம், பழவூர் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான மழை பெய்தது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் கூடிய கனம‌ழை பொழிந்தது. 

இந்நிலையில், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இடி,மின்னல்,சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு உள் கர்நாடகம் முதல் குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மற்றும் வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம்,கோவை, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த நான்கு தினங்களுக்கு இயல்பை விட வெப்பம் 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.