தமிழகம் முழுவதும் பொது முடக்கத்தை மீறி வெளியில் சுற்றியதாக 4 லட்சத்து 32 ஆயிரத்து 61 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுவது தொடர்கிறது. கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தது தொடர்பாக இதுவரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
3 லட்சத்து 59 ஆயிரத்து 129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 4 கோடியே 46 லட்சத்து 89 ஆயிரத்து 479 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.